Millie Bobby Brown Millie Bobby Brown
ஹாலிவுட் செய்திகள்

தன் மகளுடன் புகைப்படத்தை பகிர்ந்த `Stranger Things' Millie Bobby Brown!

21 வயதில் முதல் குழந்தையைப் பெற்ற தனது சொந்த தாயாரால் ஈர்க்கப்பட்ட மில்லி, சிறுவயது முதலே தாய்மை மீது மிகுந்த ஆர்வத்தோடு இருந்தை முன்பே குறிப்பிட்டுள்ளார்.

Johnson

Stranger Things சீரிஸ் மற்றும் Enola Holmes திரைப்படம் மூலம் உலகம் முழுக்க பிரபலமான நடிகை மில்லி பாபி பிரவுன். இவருக்கு நடிகர் ஜேக் உடன் சென்ற ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதி கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு குறிப்பில், "இந்த கோடையில் நாங்கள் எங்கள் அழகான பெண் குழந்தையை தத்தெடுப்பு மூலம் வரவேற்றோம். பெற்றோர் என்ற அழகான அடுத்த அத்தியாயத்தை, அமைதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை விரும்புவதோடு மிகவும் உற்சாகமாக தொடங்க இருக்கிறோம். இப்போது மூவராகிவிட்டோம். அன்புடன் மில்லி மற்றும் ஜேக்" என எழுதி இருந்தனர். நேற்று தன் குழந்தையுடன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிந்துள்ளார் மில்லி பாபி. தாயாக தனது முதல் புகைப்படத்தை பகிந்தவர் தன் மகளின் அறிமுகத்தை உலகிற்கு வழங்கி இருக்கிறார். அதில் குழந்தையின் முகம் தெரியவில்லை என்றாலும், அவளுடைய சிறிய கை, பதிவாகி இருக்கிறது.

21 வயதில் முதல் குழந்தையைப் பெற்ற தனது சொந்த தாயாரால் ஈர்க்கப்பட்ட மில்லி, சிறுவயது முதலே தாய்மை மீது மிகுந்த ஆர்வத்தோடு இருந்தை முன்பே குறிப்பிட்டுள்ளார். "நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தானும், ஜேக்கும் ஒரு பெரிய குடும்பத்தை கற்பனை செய்து கொள்கிறோம். இனி வரும் காலம் என்பது இதுதான். குழந்தையை பெற்றுக் கொள்வதற்கும் தந்தெடுப்பதற்குமான வித்தியாசம் எதையும் நான் உணரவில்லை" எனக் கூறியுள்ளார் மில்லி. இப்போது ஒரு மகளின் வரவு அவரது வாழ்வில் ஒரு முழுமை சேர்த்திருக்கிறது என வாழ்த்துகிறார்கள் ரசிகர்கள்.