பிரபலமான Fast & Furious பட வரிசையின் கடைசி பாகமான 'Fast X Part 2' உருவாகி வருகிறது. வின் டீசல் தனது இன்ஸ்டாகிராமில் 'Fast Forever' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 2028 மார்ச் 17ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். பல தாமதங்களுக்குப் பிறகு, ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தப் படம், முந்தைய பாகங்களைப் போலவே அதிரடி அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Fast & Furious படத்திற்கு உலகம் முழுக்க பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தப் பட வரிசையில் இதுவரை பத்து படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த பட வரிசையின் நிறைவு படம், அதாவது பதினொன்றாவது படத்தின் இரண்டாவது பாகம் `Fast X Part 2' உருவாகி வருகிறது. இதன் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வின் டீசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்தப் பாதை எளிதாக இருக்கும் என்று யாரும் சொல்லவில்லை... ஆனால் அது நம்முடையது. நம்மை வரையறுத்து, நமது மரபாக மாறிய ஒன்று... மேலும் ஒரு மரபு... என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று எழுதி இந்த பாகத்தின் பெயர் `Fast Forever' எனவும் படம் மார்ச் 17, 2028 வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். Fast & Furious முந்தைய பாகமான `Fast X' 2023ல் வெளியானது, அதன் அடுத்த பாகமான இந்தப் படம் 2025ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல தாமதங்கள் காரணமாக படத்தை 2028க்கு ஒத்திவைத்துள்ளனர்.
முந்தைய பாகமான `Fast X' 2023ம் ஆண்டு வெளியானது. இந்த பாகத்தை இயக்கிய Louis Leterrier தான் கடைசி பாகத்தையும் இயக்குகிறார். வின் டீசல், டொமினிக் பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். `Fast X'ல் நடித்த மிஷேல் ரோட்ரிக்ஸ், ஜான் சீனா, நதாலி இம்மானுவேல், பிரீ லார்சன், ஜேசன் ஸ்டாதம், ஜேசன் மோமோவா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இவர்கள் மற்றும் ட்வைன் ஜான்சன் மற்றும் ஸ்டாதம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்திற்காக மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.