Christopher Nolan The Odyssey
ஹாலிவுட் செய்திகள்

கிறிஸ்டோபர் நோலன் `The Odyssey' பட புதிய ட்ரெய்லர் வெளியீடு! | Christopher Nolan

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் மன்னரான ஒடிஸியஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் அபாயகரமான பயணமே இதன் கதை.

Johnson

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிவரும் `The Odyssey'. இப்படத்தில் Matt Damon, Tom Holland, Anne Hathaway, Robert Pattinson, Zendaya, Charlize Theron எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது `Memento', `The Prestige', `Dark Knight Trilogy', `Inception', `Interstellar', `Tenet', `Oppenheimer' எனப் பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இப்போது கிரேக்க இலக்கியமான `Odyssey'யை அதே பெயரில் படமாக்கியுள்ளார். ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் மன்னரான ஒடிஸியஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் அபாயகரமான பயணமே இதன் கதை.

கடந்த ஆண்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் Trojan Horse காட்சியை வெளியிட்டனர். இரண்டுக்குமே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது.