F1, Superman, Sinners Best 10 Hollywood Movies
ஹாலிவுட் செய்திகள்

2025 Recap | அசத்தலான 10 ஹாலிவுட் படங்கள்! | F1 | Sinners | Weapons

ஹாலிவுட்டில் கவனம் கவர்ந்த படங்கள் பல. எந்தெந்த படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

Johnson

Drop

Drop

டேட்டிங் செல்லலும் பெண்ணின் மொபைலில் மிரட்டல் ஒன்று வருகிறது. எந்த நபருடன் டேட் செய்ய செல்கிறாரோ அவரை அந்தப் பெண் கொலை செய்ய வேண்டும், இல்லை என்றால் அவளுடைய குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது அந்த மெசேஜ். அதன் பின் என்ன ஆனது என்ற சுவாரஸ்ய த்ரில்லர் `Drop'.

Sinners

Sinners

வேம்பையர் பின்னணியில் நிறவெறி பற்றிய சுவாரஸ்யமான கதையை `Sinners'ல் கூறியிருந்தார்கள். அட்டகாசமான திரை அனுபவமாக கவர்ந்தது.

Straw

Straw

பல கஷ்டங்களை அனுபவித்த ஒரு பெண் எடுக்கும் முடிவும் அதன் விளைவுகளுமே Straw பட கதை. அழுத்தமான பல விஷயங்களை பேசியது படம்.

F1

F1

கார் ரேஸில் அனுபவம் வாய்ந்த ஓட்டுனரும், புதிதாய் வந்த இளைஞனும் ஒரு அணியில் பணியாற்றுக்கிறார்கள். ரேஸ் என்ன ஆனது, அவர்களின் உறவு எப்படியானது என்பதை சொல்வதே `F1'. ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தை கொடுத்து பேசு பொருளானது.

Superman

Superman

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் வந்த இந்த Superman, வித்தியாசமான ஒரு சூப்பர் ஹீரோ படத்தை கொடுத்தது. படத்தின் இறுதியில் Supergirl கதைக்கான துவக்கத்தையும் கொடுத்து எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறார்கள்.

Weapons

Weapons

குறிப்பிட்ட இரவு ஒன்றில் ஊரில் உள்ள பல குழந்தைகள் காணாமல் போகிறார்கள், அவர்கள் என்ன ஆனார்கள் என சொல்லும் த்ரில்லர் சினிமா Weapons. சிறப்பான கதை சொல்லலால் பலரையும் கவர்ந்தது.

One Battle After Another

One Battle After Another

சர்வாதிகாரி ஒருவனிடம் இருந்து தன் மகளை காப்பாற்ற போராடும் தந்தையின் கதையை காமெடி கலந்து சொல்லி கவர்ந்தது `One Battle After Another'. உலக அளவில் படத்திற்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது.

Train Dreams

Train Dreams

இரயில் கட்டுமான பணியாளர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை கூறும் படம் `Train Dreams'. வசனங்கள் குறைவாக, காட்சிகளின் வழியே கதை சொல்லி அசத்தினார்கள்.

Frankenstein

Frankenstein

கதையாக, கார்டூனாக பல முறை நாம் தெரிந்து கொண்ட Frankenstein கதையை, ரத்தமும் சதையுமாக படமாக்கி இருந்தார்கள். இந்தாண்டு அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று.

Goodbye June

Goodbye June

கேத் வின்ஸ்லெட் இயக்குநராக அறிமுகமான படம் `Goodbye June'. மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாயை பார்க்க வரும் இரு மகள்கள், ஒரு மகனின் கதை. அழகான குடும்பப்படமாக அசத்தியது.