இந்திய சினிமாவில் ராஜமௌலியின் பாகுபலிக்கு தனித்த இடம் உண்டு. இப்படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக `பாகுபலி தி எபிக்' படத்தை அக்டோபர் 31 வெளியிடப்பட்டது. இப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் இப்படத்தின் இடைவேளையில் அடுத்ததாக பாகுபலி உலகில் இருந்து உருவாகும் அடுத்த படமான `Baahubali - The Eternal War Part 1'ன் டீசர் திரையானது.
இந்த டீசர் நேற்று யுடியூப்பில் வெளியிடப்பட்டது. மண்ணுலகில் கட்டப்பாவால் கொலை செய்யப்பட அமரேந்திர பாகுபலி, இறந்த பின் பாதாள லோகத்திற்கு செல்கிறான். அங்கு பாகுபலியை கைப்பற்ற விஷாசுரன் மற்றும் இந்திரனுக்கு இடையே போட்டி நடக்கிறது. இந்த போட்டி போராக மாற, அதில் இந்திரனை எதிர்கிறான் பாகுபலி என கதை நகர்கிறது. இக்கதையை இஷான் சுக்லா மற்றும் சௌமியா சர்மா எழுதியுள்ளனர். படத்தை இஷான் சுக்லா இயக்கியுள்ளார். இதற்கு முன் Star Wars: Visions – “The Bandits of Golak” என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார்.
இதற்கு முன்பும் பாகுபலி கதையை மையமாக வைத்து `The Lost Legends' என்ற சீரிஸ் அமேசான் ப்ரைம் மற்றும் `Crown of Blood' என்ற சீரிஸ் ஹார்ஸ்டரிலும் வெளியானது. ஆனால் அவை 2டி அனிமேஷனாக உருவானவை. இப்போது ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கு இணையாக தயாராகி இருக்கிறது Baahubali - The Eternal War Part 1. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் Arka Productions, Mihira Visual Labs (India), Aniventure (United Kingdom), Zaratan (Scotland), Alcyde (France), and Les Androids Associes (France). ஆகிய நிறுவனங்களிடம் அனிமேஷன் பணிகளை ஒப்படைத்துள்ளது. இதில் Alcyde நிறுவனம் Spider-Man: Into the Spider-Verse படத்தை வடிவமைத்தது. மேலும் பட ஹாலிவுட் படங்களில் புகழ் பெற்ற உழைப்பை கொடுத்துள்ளது. ஒரு பெரிய ஹீரோ படத்திற்கு இணையாக 120 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஷோபு. 2027ல் பிரம்மாண்டமாக படம் வெளியிடப்பட உள்ளது.