சினிமா

ஜிமிக்கி கம்மலை ரசித்த நடிகர் ஜிம்மி கிம்மல்!

ஜிமிக்கி கம்மலை ரசித்த நடிகர் ஜிம்மி கிம்மல்!

webteam

ஜிமிக்கம்மல் பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் நடனமாடிய வீடியோ காட்சி அமெரிக்கா வரை பரவி அந்நாட்டு பிரபல தொலைக்காட்சி நடிகரை கவர்ந்திருக்கிறது. அவரது பெயரும் ஜிம்மி கிம்மல்.

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யு-டியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றினால் பரிசு தரப்படும் என அப்படக்குவினர் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஐசிஎஸ் கல்லூரி மாணவர்கள் இப்பாடலுக்கு நடனமாடி வெளியான வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. இந்த வீடியோவை ஜிமிக்கி கம்மல் எனப்பெயரிட்டு பகிர்ந்து வந்தனர். இது அமெரிக்கவில் பிரபல தொலைக்காட்சி நடிகரின் சமூக வலைதள பக்கங்களில் ஷேராகி அங்கும் பிரபலமானது. அந்த நடிகரை இந்த ஜிம்மிக்கி கம்மல் வீடியோ சென்றடைய காரணம் என்ன தெரியுமா? அவரது பெயரும் ஜிம்மி கிம்மல். இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், ’இப்போதுவரை அந்த வீடியோ எனது பெயரிலும் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த ஜிம்மிக்கி கம்மல் நடன வீடியோவை பெரிதும் விரும்புகிறேன்’எனக் கூறியுள்ளார். 

ஜிம்மி கிம்மல் என அழைக்கப்படும் ஜேம்ஸ் கிம்மல் அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நடிகர் மட்டுமல்ல. எழுத்தாளர், தயாரிப்பாளர், காமெடியன் என பல முகங்களை கொண்டவர். சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வென்றிருக்கிறார்.