ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனது தீபாவளி வாழ்த்தை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்து நாளை வெளியாக உள்ள திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு நிலவி வருகிறது. நாளை சிறப்புக் காட்சி இருக்குமா? இருக்காதா? என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல திரையரங்கங்களில் டிக்கெட் விற்பனை இப்போதே களைக் கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கும் அவரது சக நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஹாலிவிட் நடிகர் பில் டியூக். இவர் அர்னால்ட் சுவாஸ்நேக்கர் படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர். அமெரிக்க நடிகர். தயாரிப்பாளர். மேல்ய்ம் ஆக்ஷன் கலந்த த்ரிலர் கதைகளை நடித்து பெயர் பெற்றவர். அவர் சமூக வலைத்தள பகுதியில், “நடிகர் விஜய் உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தீபாவளி நல் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.