இந்திய சினிமாவை பாராட்டிய ஹாலிவுட் சண்டை இயக்குநர் டோடர் லசாரோவ் web
சினிமா

"இந்திய சினிமாவில் உயிர்ப்பு உள்ளது; ஹாலிவுட்டில் அது இல்லை" - ஹாலிவுட் சண்டை இயக்குநர் பாராட்டு

இந்திய சினிமாவை பாராட்டி ஹாலிவுட் சண்டை இயக்குநர் டோடர் லசாரோவ் பேசியுள்ளார்.

PT WEB

இந்தியப் படங்களில் உள்ள உயிர்ப்பு, ஹாலிவுட் படங்களில் இல்லாத ஒரு சிறப்பு என்று ஹாலிவுட் சண்டை இயக்குநரான டோடர் லஸாரோவ் கூறியுள்ளார்.

இந்திய படங்களை பாராட்டிய ஹாலிவுட் சண்டை இயக்குநர்!

ஹாலிவுட் சண்டை இயக்குநரான டோடர் லஸாரோவ், தான் பணியாற்றிய இந்தியத் திரைப்படங்களில் ஏற்பட்ட அனுபவங்களை மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவை பாராட்டிய ஹாலிவுட் சண்டை இயக்குநர் டோடர் லசாரோவ்

ரிஷப் ஷெட்டியின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்திற்கு இவர் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். தான் பணியாற்றிய 10 இந்தியப் படங்களில் 'ஆர்ஆர்ஆர்' மறக்க முடியாத அனுபவத்தை அளித்ததாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் பணிபுரிவது ஒரு சம்பாதிப்பு மட்டுமே, ஆனால் இந்தியாவில் தான் வேலை செய்வது தனக்கு ஒரு குடும்ப உணர்வை அளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.