சினிமா

2017 ஆம் ஆண்டு அதிக வசூல்... பாகுபலி-2 சாதனையை முறியடித்த விவேகம்!

2017 ஆம் ஆண்டு அதிக வசூல்... பாகுபலி-2 சாதனையை முறியடித்த விவேகம்!

webteam

2017ஆம் ஆண்டு அதிக வசூல் செய்திருந்த பாகுபலி-2 படத்தின் சாதனையை விவேகம் படம் முறியடித்துள்ளது. 

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாணட்மாக உருவாகி வெளியான பாகுபலி-2 தமிழில் 2017ம் ஆண்டு அதிக வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.  அப்படத்தின் வசூல் சாதனையை அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த விவேகம் படம் முறியடித்துள்ளது. வெளியான நாண்கு நாட்களில் வசூலில் 100 கோடி க்ளப்பில் இணைந்த விவேகம் படம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் 8.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. பாகுபலி-2 படம் வெளியான இரண்டாவது வாரத்தில் 8.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது. விவேகம் படம் முதல்வாரத்தில் இந்தியாவில் 69.60 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 36.50 கோடி ரூபாயும் வசூலித்து இருந்தது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வந்தாலும் இரண்டாவது வாரத்திலும் வசூலைக் குவித்து வருகிறது. 

இதுவரை ஒட்டுமொத்தமாக 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அவர் நடித்த வீரம், ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்களின் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் இப்படம் 517 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் அதிக வசூல் செய்த அஜித்தின் முதல் படம் என்கிற பெருமையையும் விவேகம் பெற்றுள்ளது.