தூத்துக்குடி மாவட்டத்தில் மெர்சல் வெளியாகியுள்ள திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் ஆத்தூரில் மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் 30 முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் மெர்சல் படத்திற்கான டிக்கெட்டுகள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.