சினிமா

நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' படத்திற்குத் தடை - நீதிமன்றம் உத்தரவு

நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' படத்திற்குத் தடை - நீதிமன்றம் உத்தரவு

webteam

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளது.  இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.

இதனிடையே பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘கொலையுதிர் காலம்’ என்ற நாவலுக்கான உரிமையை அவரது மனைவியிடமிருந்து ‘விடியும் முன்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி குமார் என்பவர் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்தான் காப்புரிமை பெற்ற ‘கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பை விதிகளை மீ‌றி எட்செட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்தி இருப்பதாகவும், அதனால் அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி, பாலாஜி குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை வெளியிட, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.