பாலிவுட்டின், கனவு கன்னி என வர்ணிக்கப்பட்ட ஹேமமாலினி விரைவில் பாட்டியாகப் போகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த இவர், பாலிவுட்டின் ட்ரீம் கேர்ள் என வர்ணிக்கப்பட்டவர். இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஈஷா, அஹானா என்ற இரண்டு மகள்கள். இதில் ஈஷா, தமிழில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தொழிலதிபர் பரத் என்பவரை 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது கர்ப்பமாக இருக்கும் ஈஷா, ஹேமமாலியின் ஜுஹூ வீட்டில் தங்கியிருக்கிறார். ‘இந்த வருட இறுதியில் ஈஷாவுக்கு குழந்தை பிறக்கும். ஹேமமாலியின் குடும்பம் புதுவரை எதிர்பாத்துக் காத்திருக்கிறது’ என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.