விவசாயிகளின் போராட்டம் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிஏஏ தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்தவர்களே தற்போது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருவதாக கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்ட நீதிமன்றம் கங்கனா மீது வழக்குப்பதிய உத்தரவிட்டது. இதையடுத்து கங்கனா மீது அமைதியை குலைத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.