தமிழில், பார்த்திபன், பிரபுதேவா நடித்த ’ஜேம்ஸ்பாண்ட்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தெலுங்கு நடிகை ,ரேணு தேசாய். இவர், தெலுங்கு படத்தில் நடித்தபோது, ஹீரோ பவன் கல்யாணை காதலித்து 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர். 2012-ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து சொந்த ஊரான புனே சென்ற ரேணு, மராட்டிப் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மறுமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரேணு, சமுக வலைத்தளத்தில் ஒரு புகைப் படத்தைப் பதிவு செய்துள்ளார். ஓர் ஆணின் கையோடு கைகோர்த்து படத்தை வெளியிட்டுள்ள அவர், காதல் பற்றி நீண்ட கவிதை ஒன்றை யும் பதிவிட்டுள்ளார்.
(அந்தப் புகைப்படம்)
அதில், ‘எப்போதும் காணாத காதலை ஒரு நொடியில் உன்னிடம் கண்டேன். சிறிய அர்த்தமுள்ள சைகைகள், உண்மையான வார்த்தைகள் மற்றும் நேர்மையான நடவடிக்கைகள் மூலம் அந்தக் காதலைக் கண்டேன்’ என்று செல்கிறது அந்தக் கவிதை.
சரியான நபர் கிடைத்தால் மீண்டும் திருமணம் செய்வேன் என்று அடிக்கடி கூறி வந்தார் ரேணு தேசாய். இந்நிலையில் அவர் யாரையோ காதலித்து வருகிறார் என்றும் விரைவில் அவரை திருமணம் செய்வார் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.