சினிமா

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துடன் மோதும் சிம்புவின் படம்

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துடன் மோதும் சிம்புவின் படம்

sharpana

நடிகை ஹன்சிகாவின் ‘மகா’ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்பு-ஹன்சிகா நடிப்பில் ‘வாலு’ வெளியானது. அதனைத்தொடர்ந்து, சிம்பு - ஹன்சிகா மீண்டும் ‘மகா’ படத்தில் இணைந்துள்ளனர். ஹன்சிகாவின் 50 வது படமான இப்படத்தில், சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தினை ஜமீல் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை எடுத்து முடித்தும் இயக்குநருக்கும் தயாரிப்பாளரும் ஏற்பட்ட பிரச்சனையால் ‘மகா’ வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போதான் பிரச்சனைகள் தீர்ந்து படத்தின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது படக்குழு. வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி படம் தியேட்டர்கலில் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேநாளில்தான், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெளியாகிறது.