சினிமா

ஜிவி பிரகாஷ் - யோகி பாபு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம்!

ஜிவி பிரகாஷ் - யோகி பாபு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம்!

sharpana

நடிகர் ஜிவி பிரகாஷ் - யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

’குப்பத்து ராஜா.’, ‘செம’,’வாட்ச்மேன்’ என பல்வேறு படங்களில் ஜிவி பிரகாஷுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். ரசிகர்களிடம் இவர்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்த  ‘கன்னி மாடம்’ படத்தை தயாரித்த ரூபி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

விஷ்ணு வர்தனின் உதவி இயக்குநர் கெளஷிக் ராமலிங்கம் இப்படத்தை இயக்குகிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. இன்று இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிப்பதோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.