தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம்  முகநூல்
சினிமா

”10 மாதம் இதெல்லாம் செஞ்சோம்..” - நடிகர் சங்க பணிகள் குறித்து விளக்கி கூறிய நடிகர் கார்த்தி!

PT WEB

நடிகைகள் தேவையானி, சத்யபிரியா, கோவை சரளா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். தலைவர், பொது செயலாளர் ஆகியோர் பேசியதை தொடர்ந்து பொருளாளர் கார்த்தி பேசியதாவது:

”கடந்த10 மாத காலங்களில் நான் என்ன வேலை செய்தேன் என சொல்லுவதை ஒரு கடமையாக பார்க்கிறேன்.

நடிகர் கார்த்தி

உரிய சட்ட ஆலோசகரை நியமித்து சங்க கட்டடத்திற்கான வங்கி கடன் வாங்குவதற்கு அனேக ஆவணங்கள் கேட்கப்பட்டது. அதை தயார் செய்வதற்கு 10 மாத காலங்கள் ஆனது. தேவையான ஆவணங்கள் பிப்ரவரி 27ஆம் தேதி டெல்லியில் தான் கிடைத்தது. செப்டம்பர் மாதத்தில் நமக்கு கடன் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், சில பணிகள் தாமதம் ஆனதன் காரணமாக இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் அந்த நல்ல செய்தி வந்து சேரும். அப்படி நமக்கு கடன் கிடைக்கும் போது அடுத்த ஓராண்டுக்குள் கட்டி முடிக்க முடியும்.

அதில் இருந்து நாம் எதிர்பார்க்கும் அளவை விட வருமானம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறோம். சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வதிய பலன் கிடைக்க தொடர்ந்த நிதி திரட்டப்பட்டு வருகிறது. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான மொபைல் செயலி இன்னும் ஒரிரு மாதத்தில் உருவாக்கப்பட உள்ளது. அந்த செயலி மூலமாக எல்லா கலைஞர்களுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது எளிதாகும்” என்று கூறினார்.

நடிகை கோவை சரளா:

”திரைப்படத்துறை நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 163 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

நடிகை கோவை சரளா

சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி வழங்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் மூலம் நடிகர் சங்கத்திற்கு 25 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 738 பேருக்கு இதுவரை திரைப்பட துறை நலவாரியம் சார்பில் சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.