சினிமா

மறைந்த நடிகர் அம்ரிஷ் புரியை கவுரவித்த கூகுள் டூடுள்

மறைந்த நடிகர் அம்ரிஷ் புரியை கவுரவித்த கூகுள் டூடுள்

webteam

மறைந்த பிரபல நடிகர் அம்ரிஷ் புரியின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள், டூடுள் மூலம் சிறப்பித்திருக்கிறது.

கூகுள் நிறுவனம், புகழ்பெற்றவர்களை கொண்டாடும் விதமாக, அவர்கள் பிறந்த நாட்களில் டூடுள் வைத்து சிறப்பிப்பது வழக்கம். அதன்படி, பிரபல நடிகர் அம்ரிஷ் புரியின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, டூடுள் வைத்து சிறப்பித்துள்ளது.

மறைந்த அம்ரிஷ் புரி, 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களுள் ஒருவரான அவர், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஸ்பீல்பெர்க்கின் ’இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஆப் டூம்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். 

தமிழில், ரஜினியின் தளபதி, பாபா படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய இந்தி படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக நினைவு கூறப்படுபவை. வில்லனாக நடிக்கத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மறைந்த அம்ரிஷ் புரிக்கு இன்று 87 வது பிறந்த நாள். இதையொட்டி, அவருக்கு சிறப்பு டூடுள் வைத்து சிறப்பித்திருக் கிறது கூகுள்.