பிரபல மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கொச்சியில் கைது செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் படப்பிடிப்புக்காக தங்கியிருந்த சாக்கோ, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் சோதனையிட வந்த சமயத்தில் தப்பியோடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில், சாக்கோவிடம் காவல்துறையினர் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அவர் போதைப்பொருள்
பயன்படுத்தியது தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அஜித்குமார் நடிப்பில் ஹிட் கொடுத்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் சாக்கோ நடித்திருந்தார்.
இந்நிலையில் வேறொரு படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் மோசமான அனுபவம் ஏற்பட்டதாக நடிகை வின்சி அலோசியஸ் புகாரளித்த தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் கைது செய்யப்பட்ட சிறுதுநேரத்தில் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.