சினிமா

துப்பாக்கி சுடுதலில் தங்கம்: அஜித்துக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Veeramani

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்துக்கு, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச் சகோதரர் திரு.அஜித்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!” என்று கூறியிருக்கிறார்.