சினிமா

மெகா பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு வெளிவருகிறது ஜென்டில்மேன் 2

மெகா பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு வெளிவருகிறது ஜென்டில்மேன் 2

Sinekadhara


1993-ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மெகாஹிட் அடித்த படம் ஜென்டில்மேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார் கே.டி.குஞ்சுமோன். இடைவெளிக்குப் பிறகு இவர் தயாரிக்கும் முதல் படம் ஜென்டில்மேன் 2. நடிகர்கள் மற்றும் இயக்குநர் யார் என்று அறிவிக்காத நிலையில் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ’’நான் ஜென்டில்மேன் படத்தின் தொடர்ச்சியை பிரம்மாண்டமாக எடுக்க நினைத்துள்ளேன். பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேடிவருகிறேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன், கல்வித்துறையில் நடக்கும் ஊழலைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் 4 மாநில விருதுகளையும் பெற்றது.” என்றார்.

ஜென்டில்மேன் 2 படத்தில் முக்கிய நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.