இயக்குனர் பாலா இயக்கதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாக படம் ‘வர்மா’. இந்தப் படத்தில் துருவுக்கு யார் ஜோடி என்பது படக்குழுவால் இதுவரை அறிவிக்கபடாமல் இருந்து வருகிறது.
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் காதல் படமாக கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தின் தமிழ் உரிமையை இயக்குனர் பாலா வாங்கி இருந்தார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளம் காத்மாண்டுவில் நடைபெற்றது. அப்பாவை போலவே துருவும் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் நடிந்து முடித்ததாகவும், மகனின் நடிப்பை பார்க்க விக்ரம் நேபாளம் சென்றிருப்பதாக தெரிய வந்தது.
இந்தப் படத்தில் புதுமுக நடிகை ஒருவர் நடிக்கலாம் எனத் தெரிகிறது. அக்ஷராஹாசன்,சாய்பல்லவி பெயரும் அடிபட்டு வந்தது. இந்நிலையில்தான் அண்மையில் துருவுக்கு ஜோடியாக கெளதமி மகள் சுபலட்சுமி நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதை அறிந்த கெளதமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்‘மறுபடியும் என் மகள் திரைவுலகில் அறிமுகமாகிறாள் என செய்தியைக் கண்டேன். என் மகள் படிப்பில் மும்முரமாக இருக்கிறாள். இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஆனாலும் என் மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’எனப் பதிவிட்டுள்ளார்