சினிமா

கெளதம் கார்த்திக்கிற்கு மாறிமாறி உணவு ஊட்டிய ஆதரவற்ற பிள்ளைகள் - வீடியோ 

கெளதம் கார்த்திக்கிற்கு மாறிமாறி உணவு ஊட்டிய ஆதரவற்ற பிள்ளைகள் - வீடியோ 

webteam

ஆதரவற்ற பிள்ளைகள் தனக்கு மாறிமாறி உணவு ஊட்டிய வீடியோவை நடிகர் கெளதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் திரை வாழ்க்கைக்கு அறிமுகமானவர் கெளதம் கார்த்திக். அதன் பிறகு தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் பெரிய அளவுக்குப் பேசப்படும் படங்கள் பட்டியலில் இவரது படங்கள் இடம் பிடிக்கவில்லை. ஆனால் இளம் நடிகரான கெளதம் கார்த்திக்கிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

இந்நிலையில் கெளதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “தங்களுக்கு சேவை செய்வதற்கு முன்பு மற்றவர்களுக்கு சேவை செய்ய அவர்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வளர்க்கப்பட்ட விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆதரவற்ற பிள்ளைகள் ஒருவர் மாறி ஒருவர் கெளதம் கார்த்திக்கிற்கு உணவு ஊட்டுகின்றனர். அவர் வாய் நிறைய வாங்கிக் கொண்டு சாப்பிட முடியாமல் சாப்பிடுகிறார்.

இந்த ஆசிரமம் தேனி அருகே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது சார்ந்து அவரது வட்டாரத்தில் விசாரித்த போது, “கெளதம் கார்த்திக் தொடர்ந்து பயணத்தில் இருந்தார். அப்போது அவரது ரசிகர்களுடன் நேரங்களை செலவழித்தார். தனது பிறந்தநாளை அவர்களுடன் செலவழித்தார். மேலும் ஓசூரில் நடைபெற்ற அவரது ரசிகரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி கலந்து கொண்டார். அங்கிருந்து அவர் கிருஷ்ணகிரி போய் ரசிகர்களை சந்தித்தார்.

அதன் பின் தேனிக்குப் போய் தங்கினார். அங்கே அவரது இன்னொரு ரசிகரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சென்றார். இரவு தங்கினார். அடுத்த நாள் காலை இந்த ஆசிரமத்திற்குப் போனார். அந்தக் குழந்தைகளுடன் அப்போதுதான் நேரத்தை பகிர்ந்து கொண்டார். அங்கே சாப்பிட்டார். அங்கு இருந்து நிறைய எனர்ஜி கிடைத்தது. ரொம்ப ஆக்கப்பூர்வமான நேரமாக அது அமைந்திருந்தது” என தெரிய வந்துள்ளது.