ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ’இவன் தந்திரன்’ பட ப்ரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கிடம் பேசினார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் நடிகராகவே இருக்க வேண்டும். ரஜினிகாந்த் எப்போதும் திரையுலக சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. அவரின் இந்தப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ரஜினிகாந்த் குறித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என நான் கூறவில்லை. ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவரை நான் சூப்பர் ஸ்டாராக மட்டுமே பார்க்க விரும்புகிறேன், என்றுதான் தெரிவித்து இருந்தேன். அதற்கு மேல் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு என்பது போல எழுதிவிட்டார்கள். நான் ரஜினியின் படங்களை விரும்பிப் பார்ப்பவன். அவரை சூப்பர் ஸ்டாராகப் பார்க்கவே ஆசைப்படுகிறேன்," என விளக்கமளித்து இருக்கிறார். தனது தந்தையில் அரசியல் முடிவை நான் ஆதரிக்க மாட்டேன். அவருடன் படங்களில் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என கெளதம் கார்த்தி தெரிவித்து இருக்கிறார்.