சினிமா

`தி லெஜண்ட்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெறும் நிறுவனம் இதுதான்... வெளியான அடுத்த அப்டேட்

`தி லெஜண்ட்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெறும் நிறுவனம் இதுதான்... வெளியான அடுத்த அப்டேட்

நிவேதா ஜெகராஜா

தி லெஜண்ட் சரவணா ப்ரொடக்‌ஷண்ஸ் தயாரிக்கும் `தி லெஜண்ட்’ படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கிறது கணேஷ் பிலிம்ஸ்.

தொழிலதிபர் சரவணன், ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் `தி லெஜண்ட்’. ஜேடி ஜெர்ரி இயக்கியிருக்கும் இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படம் ஜூலை 28 திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சுமார் 800 ஸ்க்ரீன்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது.

இப்படத்தின் மூலம் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு, பிரபு, நாசர், மயில்சாமி, பழம்பெரும் நடிகை சச்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா லெஜண்ட் சரவணனுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அஜித், விக்ரம் நடித்த 'உல்லாசம்', ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த 'விசில்' படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர். அதிரடி சண்டைகள்,ஆட்டம் பாட்டம், பஞ்ச் வசனம் என ட்ரைலரில் மிரட்டி இருக்கிறார் சரவணன் அருள்.

இப்படத்தின் இந்தி உரிமையை, கனேஷ் பிலிம்ஸின் நம்பிராஜன், வெளியீட்டு உரிமையை இன்று பெற்றுக்கொண்டார். இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு ட்ரைலரை நடிகை தமன்னா வெளியிட உள்ளார்.

முன்னதாக இப்படத்தின் தெலுங்கு, கன்னட ரிலீஸை பெறுவது யார் உள்ளிட்ட அப்டேட்கள் கடந்த சில தினங்களாக வெளிவந்துகொண்டிருந்தன. அதன்படி தெலுங்கு ஆந்திரா ரிலீஸ் உரிமையை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ், கன்னட ரிலீஸ் உரிமையை கே.செந்தில், கேரள உரிமையை மேஜிக் ஃப்ரேம்ஸ், இந்தியா தவிர பிற நாடுகளுக்கான ரிலீஸ் உரிமையை ஏபிஐ ஃப்லிம்ஸ் ஆகியோர் பெற்றுள்ளனர். ரிலீஸ் தேதி நெருங்க நெருக்க, படத்துக்கான ப்ரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.