சினிமா

முதல்வர் எடப்பாடியுடன் ஜி.வி.பிரகாஷ் சந்திப்பு

முதல்வர் எடப்பாடியுடன் ஜி.வி.பிரகாஷ் சந்திப்பு

webteam

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் சந்தித்தார்.

ஹார்வட் பல்கலைக்கழகத்தில் புதியதாக ஏற்பட இருக்கின்ற தமிழ் இருக்கைக்கு சமீபத்தில் தமிழக அரசு பத்து கோடி ரூபாய் நிதியளித்தது. அதனை அடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்கள் சார்பில் நன்றி கூறுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முன்வந்து உதவ வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.