Noah Hawley உருவாக்கியுள்ள சீரிஸ் `Alien: Earth'. ஏலியனின் வருகைக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளே கதை.
ருசிர் இயக்கியுள்ள சீரிஸ் `Court Kacheri'. மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் பணிபுரியும் வக்கீல் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களே கதை.
சுமித் இயக்கத்தில் ப்ரதீக் காந்தி நடித்துள்ள சீரிஸ் `Saare Jahan Se Accha'. ரா ஏஜென்ட் ஒருவரின் மிஷன் பற்றிய கதை.
ராகவ் தார் இயக்கியுள்ள சீரிஸ் `Andhera'. காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் எடுக்கும் முயற்சிகளே கதை.
பிரசாந்த் குமார் இயக்கியுள்ள சீரிஸ் `Constable Kanakam'. பெண் காவலர் ஒரு சிறிய கிராமத்திற்கு மாற்றலாகி வந்த பின் நடப்பவையே கதை.
அருண் கோபாலன் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள படம் `Tehran'. ஆயுதக்கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள த்ரில்லர் படம்.
Benjamin Caron இயக்கத்தில் Vanessa Kirby நடித்துள்ள படம் `The Night Always Comes'. Lynette என்ற பெண் தன எதிர்காலத்தை காப்பாற்ற செய்யும் விஷயங்களே கதை.
Christopher Landon இயக்கிய படம் `Drop'. பல வருடங்களுக்குப் பிறகு டேட்டிங் செல்லும், கணவரை இழந்த பெண், அவருக்கு வரும் ஒரு பிரச்சனை. அதை எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.
Peter Hastings இயக்கிய அனிமேஷன் படம் Dog Man. ஒரு காவலரும், அவரது நாயும் ஒரு சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி ஒருவரை தேடுவதே கதை.
விபின் இயக்கிய படம் `Vyasanasametham Bandhumithradhikal'. திருவனந்தபுரத்தின் கிராம ஒன்றில் நடக்கும் மரண வீட்டு நிகழ்வில், சிலரின் எண்ணங்களும் செயல்களையும் சுற்றி நடக்கும் கதை.
பிரவீன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா நடித்த படம் `JSK - Janaki V vs State of Kerala'. ஜானகி என்ற பெண் நடத்தும் நீதி போராட்டமே கதை
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் `கூலி'. ஒரு துறைமுகத்தை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கிறது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள படம் `War 2'. ஏஜெண்டுக்கும் அவரை அழிக்க வருபவனுக்குமான போராட்டமே கதை.