சினிமா

4 ஹீரோக்களை இயக்குகிறார் மணிரத்னம்

4 ஹீரோக்களை இயக்குகிறார் மணிரத்னம்

webteam

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோக்கள் நடிக்க இருக்கின்றனர்.

 ’காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சிம்பு, நானி ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘ இது பெரிய பட்ஜெட் படம். விஜய் சேதுபதி, பகத் பாசில், சிம்பு நடிப்பது உறுதியாகி இருக்கிறது. நானி விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார். ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்’ என்றனர்.
இந்த படத்தில் நடிப்பதை ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர் ஏற்கனவே உறுதிபடுத்தி இருந்தனர்.