சினிமா

ஷோலே ஷூட்டிங் ஸ்பாட்: வனத்துறை எதிர்ப்பு

ஷோலே ஷூட்டிங் ஸ்பாட்: வனத்துறை எதிர்ப்பு

webteam

புகழ்பெற்ற ஷோலே திரைப்படத்தில் முக்கிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமமாலினி உட்பட் பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஷோலே’. 1975ல் வெளியான இந்த படத்தை ரமேஷ் சிப்பி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ராமகுண்டம் என்ற இடத்தில் நடந்தது. இந்த இடத்தி‌ல் ஏழரை கோடி ரூபாய் செலவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் படக்காட்சிகள் கொண்ட மையத்தை ஏற்படுத்த கர்நாடக சுற்றுலாத்துறைத் திட்டமிட்டுள்ளது. இந்த இடத்தைச் சுற்றுலா மையமாக மாற்றுவதால் வனப் பகுதி பாதிக்கப்படும் என கர்நாடக வனத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.