மெர்சலை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
1 விஜய் முதன்முறையாக விவசாயியாக நடித்திருக்கிறார். விவசாயிகள் பிரச்னை தலைதூக்கி உள்ள தமிழச் சூழலில் அந்தக் கதாப்பாத்திரம் பல பிரச்னைகளை அலசி ஆராய்ந்திருக்கிறது.
2 முதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். ஆகவே இந்தப் படம் அவர் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
3 விஜய் அவர் மேஜிக் மேனாக வந்து பல வித்தைகளை காட்டுகிறார். இதுவும் புதியது. குழந்தைகளுக்கு ஏற்கெனவே பிடிக்கும் விஜய்யை கூடுதலாக திருப்தி செய்ய இருக்கிறார் இந்த மாயாஜால மனிதர்.
4 அட்லீ ஒரு மல்டி ஸ்டாரை மூன்று கோணங்களில் காட்சி படுத்திருக்கிறார். மூன்றும் மூன்று திசைகள். ஆகவே இந்தப் படம் முக்கியமானதாகிறது.
5 இது ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வது வருஷ ஸ்பெஷல். விஜய்க்கும் 25 வருட ஸ்பெஷல். பாகுபலி திரைக்கதை மன்னன் ராஜேந்திர பிரசாத் இந்தக் கதையை செதுக்கிச் செதுக்கிச் செய்திருக்கிறார்.