சினிமா

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ’பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ’பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Sinekadhara

ஆண்ட்ரியா நடித்து வரும் ’பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.

2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த பிசாசு திரைப்படத்தின் 2வது பாகத்தை மிஷ்கின் தற்போது இயக்கி வருகிறார். அதில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் பிசாசு 2 படத்திற்கான இறுதிக் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வையை வரும் 3ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.