சினிமா

மே17ல் ‘சாமி ஸ்கொயர்’ ஃபர்ஸ்ட் லுக்

மே17ல் ‘சாமி ஸ்கொயர்’ ஃபர்ஸ்ட் லுக்

webteam

சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே17 அன்று வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்’. இந்தப் படம் ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் தயாரான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது. இவருடன் கீர்த்தி சுரேஷ் சேர்ந்து நடித்து வருகிறார். முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தார். ஆனால் அவரது பாத்திரம் சரியாக அமையாததால் அதில் இருந்து வெளியேறுவதாக த்ரிஷா தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அது சம்பந்தமாக படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. முதல் பாகத்தில் ‘ஆறுசாமி’யாக விக்ரம் நடித்திருந்த போலீஸ் கேரக்டர் அவரது ரசிகர் இடையே பெரும் பெயரை சம்பாதித்து கொடுத்தது.

இந்நிலையில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 17 அன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திரை உலகத்தில் 48 நாள்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. திரை உலகம் மீண்டும் சகஜ நிலையில் அடைந்துள்ள நிலையில் இதன் 80 சதவீத வேலைகள் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.