சினிமா

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி!

webteam

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் சிலர் போட்டி போடுகின் றனர்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களை எடுப்பது இப்போதைய டிரெண்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள். அரசி யல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. விஜய் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார். இவர்தான் தென்னிந்திய மொழிகளுக்கு வெளிநாட்டில் விருது வழங்கும் ’சைமா’ விழா வை நடத்தி வருகிறார். மேலும், 83 ஆம், ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து, ’83 world cup’, ஆந்திர முன் னாள் முதல்வரும் நடிகருமான ’என்டி ராமராவ்’ சுயசரிதை ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேசிய அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் முன் னுதாரணம். திரை துறையிலும், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம். அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி படத்தை துவக்க இருக்கிறோம்" என்கிறார் விப்ரி மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.

ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலர் போட்டி போடுகின்றனர். நடிகை த்ரிஷா, ‘ஜெயலலிதாவாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவில் அதில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். நடிகை மஞ்சிமா மோகனும் ஜெயலலிதாவாக நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இவர்கள் தவிர நயன்தாரா, ஜோதிகா ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. மேலும் சில நடிகைகள் ஜெயலலிதாக நடிக்க போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாரையும் இன்னும் முடிவு செய்யவில்லை என படக்குழு தெரி வித்துள்ளது.