சினிமா

லுங்கி.. கையில் பேட்.. சுசீந்திரன் - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு..!

லுங்கி.. கையில் பேட்.. சுசீந்திரன் - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு..!

JustinDurai

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது

சிம்புவை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். மாதவ் மீடியாவின் ஐந்தாவது தயாரிப்பாக சென்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் ரசனைகளுடன் படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிம்புவுக்குப் பொருந்தும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளதாகவும் ஒரே கட்டமாக படத்தை முடிக்கும் திட்டத்தில் படக்குழு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என பிரபலமான தொழில்நுட்பக் குழுவினரும் கைகோர்த்துள்ளனர். 2021 ம் ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி வரும் 26ம் தேதி வ மதியம் 12.12 மணிக்கு #SilambarasanTR46 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது