ott platforms web
சினிமா

’நேரடியாக ஓடிடியில் நடிப்போருக்கு ஒத்துழைப்பு இல்லை..’ - திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

நேரடியாக ஓடிடியில் நடிப்போருக்கு ஒத்துழைப்பு இல்லை என திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது..

Rishan Vengai

சினிமா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அப்போது தீர்மானங்களை வாசித்தபோது உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

vetrimaaran

இத்தீர்மானங்களில் நடிகர்களுக்கு சம்பளமாக கொடுப்பதற்கு பதிலாக வருவாயில் பங்கு, ஓடிடியில் நேரடியாக நடிப்பவர்களுக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன..

ஓடிடியில் நடிப்போருக்கு ஒத்துழைப்பு இல்லை..

சென்னை எழும்பூரில் நடந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், முக்கிய தீர்மானங்களாக முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக இல்லாமல் வருவாயில் மட்டுமே பங்கு தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

மேலும் நேரடியாக ஓடிடியில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..