சினிமா

திரைத்துறை நடத்தும் போராட்டம் முடிவுக்கு வருமா?

திரைத்துறை நடத்தும் போராட்டம் முடிவுக்கு வருமா?

webteam

தமிழக திரைத்துறையினர் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

டிஜிட்டல் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் 45 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சினிமா தொடர்பான எந்தவித பணிகளும் நடைபெறாததால் புதிய படங்களும் வெளிவரவில்லை. இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்தப் பிரச்னையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்தினர் பங்கேற்கின்றனர்.