சினிமா

தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா

தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா

webteam

முன்னணி திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேனியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

சென்னையிலிருந்து இன்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவரது சொந்த ஊரான தேனிக்குச் சென்றார். தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டியில் அவர் நுழைந்தபோது அவரை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அந்தச் சோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது. கொரோனா தொற்றில் சிகப்பு நிற மண்டலமாகச் சென்னை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஊர் திரும்பியதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், வெளியூரிலிருந்து வந்ததால் அவரை 14 நாள் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளச் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர். அதனை ஏற்று அவர் தேனியில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்ற அறிவிப்புப் பலகையும் ஒட்டப்பட்டுள்ளது.