மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். திரைப்படத்தில் சிங்கப்பூரில் வரி குறைவு, இந்தியாவில் வரி அதிகம் என தவறான தகவல் கூறப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் மீது தவறான புரிதலை ஏற்படுத்தும் படத்துக்கு தணிக்கை சான்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.