சினிமா

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேர் வேண்டும் - செல்வமணி

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேர் வேண்டும் - செல்வமணி

webteam

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளோம் என பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி தெரிவித்துள்ளார்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேரை வைத்து நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் வழக்கமாக 150 - 180 பேர் பணியாற்ற வேண்டியுள்ளது. எந்த தொலைக்காட்சிக்கு தயாரிக்கப்படுகிறதோ அந்த தொலைக்காட்சி நிறுவனமே படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

படப்பிடிப்பு தளங்களை முழுமையாக சுத்தப்படுத்திய பிறகே படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத் துறை குறித்து பேசிய அவர், திரைப்பட பின்னணி வேலைகளில் (post production) எவ்வித சிரமும் இல்லை.

அரசு விதித்துள்ள நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றி பணியாற்றுகிறோம்.திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதித்தால் குறைந்தபட்சம் 200 பேர் தேவைப்படுவார்கள். தனிமைபடுத்தப்படலாம் என்ற அச்சத்தால் வெளி மாநில தொழிலாளர்கள் வர யோசிக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.