ஸ்பைடர் படத்தின் நாயகி ரகுல்பீரித் சிங் துணிக்கடை திறப்பு விழாவிற்கு வந்தபோது கூடிய ரசிகர்கள் கூட்டத்தை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருப்பதியில் துணிக் கடை திறப்பு விழாவிற்கு வந்த பிரபல நடிகையை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிய துணிக்கடையை ஸ்பைடர் திரைப்படத்தின் கதாநாயகி ரகுல்பீரித் சிங் திறந்து வைத்தார். அவரை காண சாலையின் இருபுறமும் ரசிகர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.