leo trailer
leo trailer PT
சினிமா

லியோ ட்ரெய்லரை பார்க்க தடுப்புகளை உடைத்து தியேட்டருக்குள் புகுந்த ரசிகர்கள்! சென்னையில் பரபரப்பு

Rishan Vengai

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பேன் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே அதிகளவு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரமின் 420 கோடி வசூல் வெற்றிக்கு பிறகு இணைந்திருக்கும் லோகேஷ்-விஜய் கூட்டணி பாக்ஸ் ஆபிஸ் கலக்செனில் புது ரெக்கார்டை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEO

இந்நிலையில், படத்தை சொன்னபடியே 19ஆம் தேதியன்று வெளியிடுவதாக தெரிவித்திருந்த படக்குழு அதை உறுதிசெய்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை கடைசி நேரத்தில் ரத்து செய்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், விஜய் ரசிகர்களால் அது எளிதில் ஜீரணிக்கும் விசயமாக இருக்கவேல்லை. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா தானே இல்லை ட்ரெய்லர்ல பாத்துக்கலாம் என ரசிகர்கள் லியோ படத்தின் டிரெய்லருக்காக காத்திருந்தனர்.

டைமிங் குழப்பத்தால் தியேட்டரின் தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைந்த ரசிகர்கள்!

ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்ட படக்குழு லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது. ஆனால் ட்ரெய்லர் வெளியீட்டின் நேரம் என்னவென குறிப்பிடப்படவில்லை. நேரத்தை குறிப்பிடாமலே காத்திருங்கள் என்பது போல வெளியிட்ட படக்குழுவால், இசை வெளியீட்டு விழா இல்லாத விரக்தியில் இருந்து வெளிவராத ரசிகர்கள் குழப்பமடைந்தனர். நேரம் அதிகமாக அதிகமாக “டைமிங்க சொல்லுங்க பா, வெயிட்டிங்க்லயே வெறியாகுது” என சமூக வலைதளங்களில் குமுறவே ஆரம்பித்துவிட்டனர்.

லியோ

படத்தின் டிரெய்லர் மாலை வெளியாகும் என மீண்டும் அறிவிக்கப்பட 5 மணியா, 6 மணியா, 7 மணியா என்ற குழப்பம் நீடித்து கொண்டே இருந்தது. மேலும் ஹிந்தி ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாகும் என ட்ரெண்ட் ஆன நிலையில், தமிழ் ரசிகர்களின் வெயிட்டிங் விரக்தியாக மாற ஆரம்பித்தது. 5 மணி கடந்த பிறகு பொறுமையாக 6.30 மணிக்கு தமிழ் ட்ரெய்லர் வெளியிடப்படும் என கூறப்பட்டது. ட்ரெய்லர் வெளியிடுவதாய் அறிவிக்கப்பட்ட திரையரங்குகளில் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர். சில இடங்களில் ரசிகர்கள் கொட்டும் மழையிலும் தியேட்டரை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரித்தனர்.

லியோ

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ட்ரெய்லர் வெளியீட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மாலையில் இருந்தே ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். 6 மணிக்கு மேல் ரசிகர்கள் தியேட்டரில் நுழைய அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலால் தியேட்டரின் முன் வைக்கப்பட்டிருந்த பாரிகாட் தடுப்புகளை உடைந்துகொண்டு உள்ளே சென்றனர். ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் நுழைந்த நிலையில் பல பேருக்கு காயங்களும், சிலருக்கு சட்டைகளும் கிழிந்தன. பலபேர் தங்களுடைய செருப்புகளை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருந்தனர்.

லியோ

படக்குழு நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்கப்படாதது ரசிகர்களின் பொறுமையை அதிகமாக சோதித்துவிட்டதாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ட்ரெய்லர் 6.30 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் லியோ படத்தை கொண்டாடிவருகின்றனர்.