சினிமா

இரவு முழுவதும் விமான நிலையத்தில் காத்திருந்து தீபிகாவுக்கு பிறந்தநாள் கேக் வெட்டிய ரசிகர்!

இரவு முழுவதும் விமான நிலையத்தில் காத்திருந்து தீபிகாவுக்கு பிறந்தநாள் கேக் வெட்டிய ரசிகர்!

webteam

இரவு முழுவதும் விமான நிலையத்தில் காத்திருந்து தீபிகா படுகோனுக்கு ரசிகர் ஒருவர் பிறந்தநாள் கேக் வெட்டினார்.

பாலிவுட் பக்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகை தீபிகா படுகோனே. அவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடும் தீபிகாவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ரசிகர் ஒருவர் தீபிகா படுகோனை நேரில் சந்தித்தே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். லக்னோ செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வருவதை அறிந்த அந்த ரசிகர் இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்துள்ளார். அதனைக் கண்ட புகைப்படக்கலைஞர் மனவ் மங்லனி, தீபிகோ படுகோன் வந்ததும் அவரிடம் அந்த ரசிகரை அழைத்துச் சென்றுள்ளார். இவர் உங்கள் தீவிர ரசிகர். இரவு முழுவதும் உங்களுக்காக காத்திருக்கிறார் என தெரிவிக்க ரசிகரின் அன்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட தீபிகா, ரசிகர் கொண்டு வந்த கேக்கையும் வெட்டினார்.

அருகில் நின்ற கணவர் ரன்வீர் சிங் தான் கொண்டு வந்த ஸ்பீக்கரில் பிறந்தநாள் வாழ்த்து பாடலை ஒலிக்கவைத்தார். புகைப்படக்கலைஞர் மனவ் மங்லனி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து தீபிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.