தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தாலும், அனைவரும் அவரவர் வாழ்க்கையை பார்க்கவேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருபவர். அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு பயிற்சி எடுத்த போது, விபத்தில் சிக்கினார் அஜித்குமார். ஆனால் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரேசிற்க்கு பிறகு அஜித் பேசிய வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் ஊடகம் முன்பு பேசியிருப்பதால் கூடுதல் கவனம் பெற்றது.
இதற்கிடையில், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்பம் வரும் பிப்ரவரியில் வெளியாகயுள்ளது என அறிவிப்பு வெளியாகி இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அஜித் துபாயில் தனது ரசிகர் ஒருவர் பாடுவதை ரசித்து கேட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ துபாயில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் ரசிகர் ஒருவர் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இருந்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்… காதல் முகம் கண்டுகொண்டேன்’ என்ற பாடலை பாடுகிறார். அதை அஜித் அருகில் நின்றவாறே ரசித்தபடி கேட்கிறார். பாடி முடித்தவுடன் ரசிகருக்கு கை கொடுத்து பாராட்டிவிட்டு ஒரு hug செய்கிறார். பிறகு உங்கள் பெயர் என்ன என கேட்கிறார். அதற்கு ரசிகர் தனது பெயர் அஜித் என சொன்னதும் நடிகர் அஜித் சற்றே ஷாக் ஆகி கியூட்டாக ஒரு சிரிப்பு சிரிக்கிறார். இரண்டு அஜித்தும் ஒரே நேரத்தில் சந்தித்து இருப்பது unexpected co incident என ரசிகர்கள் இந்த வீடியோவை தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.