சினிமா

பிரபல நகைச்சுவை நடிகரிடம் வழிப்பறி

பிரபல நகைச்சுவை நடிகரிடம் வழிப்பறி

webteam

சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி செய்த நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 
சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த நடிகர் கொட்டாச்சி, ஈரோடு அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்புவதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த கொட்டாச்சியை சாமர்த்தியமாக பேசி, தனியார் டிராவல்சுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஒரு நபர் ஆட்டோவில் அழைத்துச்சென்றார். ஆனால், ஆட்டோ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை அறிந்த கொட்டாச்சி மற்றொரு நடிகரை தொடர்பு கொள்ள முயன்றார். அதற்குள் ஆட்டோவில் வந்த நபர், திடீரென்று கொட்டாச்சியிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டும், அவரை ஆட்டோவிலேயே கீழே தள்ளிவிட்டும், அவர் அணிந்திருந்த 2 சவரன் நகை மற்றும் பர்சையும் பறித்துக்கொண்டும் தப்பி ஓடினார். ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மீண்டும் தனது நண்பரும், நடிகருமான பெஞ்சமினின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சூரமங்கலம் காவல்நிலையத்தில் கொட்டாச்சி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.