இந்திய திரையுலகில் தனித்துவமான நடிகர்களும் ஒருவர் ஃபகத் பாசில். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள `ஓடும் குதிரா சாடும் குதிரா' படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கான பேட்டி ஒன்றில் ஃபகத் கூறிய விஷயம் ஒன்று வைரலாக சுற்றி வருகிறது.
பிரபல மெக்சிகன் இயக்குநர் அலஹான்ரோ இனாரிட்டு. Amores perros, 21 Grams, Birdman, The Revenant எனப் பல புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் ஃபகத் பாசிலை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஃபகத் பாசில்.
அதற்கான காரணமாக ஃபகத் சொன்னது, "இனாரிட்டு எதிர்பார்க்க கூடிய மொழி உச்சரிப்பு என்னிடத்தில் இல்லை. எனவே அதை நான் கற்றுக்கொள்ள, நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டும், அதற்கு பணமும் அளிக்கப்படமாட்டார்கள் எனக் கூறினார். எனவே அந்த வாய்ப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டேன்." என்றார்.
மேலும் "என் வாழ்வில் நடந்த எல்லா மேஜிக்கும் இங்குதான் நடந்தது. எந்த மாற்றம் நடந்தாலும், அதுவும் இங்கேயே தான் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு மாற்றத்தையோ, மேஜிக்கையோ தேடி கேரளாவை தாண்டி செல்லும் தேவை இருப்பதாகா நான் உணரவில்லை" எனக் கூறியுள்ளார் ஃபகத் பாசில்.