கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகர் ஃபகத் ஃபாசில்.
’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான, பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில், நடந்த இப்படத்தின் பூஜையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டப் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், ஃபகத் ஃபாசில் கலந்துகொள்ளவில்லை. ‘மாலிக்’ படம் ஓடிடியில் வெளியானதால், அதில் பிஸியாக இருந்தார் ஃபகத். தற்போது ’விக்ரம்’ படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், ஃபகத் ஃபாசில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதனை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘விக்ரம்’ என்று ஃபகத் ஃபாசில் உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.