இயக்குனர் சிதம்பரம்
இயக்குனர் சிதம்பரம் PT
சினிமா

EXCLUSIVE | “கமல் சாரை பார்த்தாச்சு... ராஜா சாரை பார்க்கணும்” - Manjummel Boys இயக்குனர் சிதம்பரம்!

PT WEB, Jayashree A, Johnson

மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் தமிழில் பெறும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதன் இயக்குநர் சிதம்பரம் இந்தப் படத்தை பற்றி நம்மிடையே பேசினார்.

இயக்குனர் சிதம்பரம்

அப்போது, “மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் பாடல் இருந்ததால் தமிழில் படம் நிச்சயம் வெற்றி பெரும் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததை விட பெரிய அளவில் இப்படம் ஹிட் அடித்துள்ளது. இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சிறு வயதாக இருக்கும்பொழுது குணா படம் பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்படம் அதை கொண்டு தழுவப்பட்ட படம் அல்ல... அந்த செட்டில் எடுக்கப்பட்ட படம் மட்டும்தான்.

கொடைக்கானலில் இருக்கும் குணா குகையில் இந்த படம் எடுப்பதற்காக 30 நாட்கள் தங்கி இருந்து ஷுட் செய்தோம். அது மறக்கமுடியாத நாட்கள். இந்தப் படத்தின் ட்ரையலை கமல் சார் பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்து பாராட்டியது மறக்கமுடியாத தருணம். இளையராஜா சாரிடமும் அனுமதி பெற்றுதான் இந்த பாடலை நாங்கள் இப்படத்தில் சேர்த்துக்கொண்டோம். கமல் சாரை பார்த்தாச்சு... ராஜா சார் அடுத்து பார்க்கணும்” என்றார்.

முன்னதாக இப்படத்தை பார்த்துவிட்டு நேற்றையதினம் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினர் அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.

படத்தின் இசையமைப்பாளர் அதுகுறித்து கூறுகையில், “க்ளைமேக்ஸ் பார்த்துவிட்டு புல்லரித்ததாக கமல் சார் சொன்னார்” எனக்கூறியிருந்தார். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் படத்தை பார்த்துவிட்டு அனைவரையும் நேரில் பாராட்டியிருந்தார்.

தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வரும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் இயக்குநரோடு நாம் நடத்திய நேர்காணலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.