சினிமா

”காந்திமதி வந்தாலும் சரி, கடவுளே வந்தாலும் சரி” -குருதி ஆட்டம் டீஸரில் மிரட்டும் அதர்வா

”காந்திமதி வந்தாலும் சரி, கடவுளே வந்தாலும் சரி” -குருதி ஆட்டம் டீஸரில் மிரட்டும் அதர்வா

webteam

அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் "குருதி ஆட்டம்" படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

“8 தோட்டாக்கள்” படம் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், அதர்வா நடித்துள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ராதாரவி நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராக் ஃபோர்ட் எண்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. மதுரைப் பிண்ணனியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டீஸரில், வன்முறை சார்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.