பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற பிறகு நடிகை ஓவியாவை தங்களது படங்களில் நடிக்கவைக்க இயக்குனர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஸ்விட்ச் ஆப் மோடில் இருக்கிறார் ஓவியா.
‘அவர் இன்னும் ஃபோனை ஆன் செய்யவில்லை’ என தமிழ்-2 பட இயக்குனர் அமுதன் சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் தன் அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்கவைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆனந்த் சங்கர் பேசும்போது, “சினிமாவே பார்க்காதவர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக வீட்டில் இருப்பவர்களின் மனதில் பதிந்துவிட்டனர். அதனால் ஓவியாவின் மார்கெட் நிலவரம் அதிகரித்து வருகிறது. எனது படத்தில் ஓவியா நடித்தால் நன்றாகயிருக்கும் என்பதால் அவரை நடிக்க வைக்க முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால் யாரும் ஓவியாவை அணுக முடியவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு மேல் அடைந்து கிடந்ததால் தற்போது ஊர்சுற்றக் கிளம்பிவிட்டார் ஓவியா. தனக்குப் பிடித்த இடங்களுக்கெல்லாம் தனியாகவே சென்று ஊர் சுற்றி வருகிறார். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர்களில் அதிக படவாய்ப்பு குவிந்து வருவது ஓவியாவுக்கு மட்டும்தான். ஆனால், யாருக்கும் பிடிகொடுக்காமல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகி வருகிறார் ஓவியா.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று வெளியே அனுப்பப்பட்ட மற்றொரு நடிகை நமிதா. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவர் சென்னையில் தங்காமல் ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக இமயமலை பகுதிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.