கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் செப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகவுள்ளது.
இயக்குநர் கவுதம் மேனன் தனுஷை வைத்து எடுத்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தனுஷின் மற்ற படங்கள் தான் ரிலீஸ் ஆனதே தவிர, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. ஏற்கனவே படத்தின் வரும் ‘மறுவார்த்தை பேசாதே’ சாங் ரசிகர்களை கவர்ந்திருந்ததால், அதனை சினிமா திரையில் காண வேண்டும் என காத்துக்கொண்டிருந்தனர். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்று வெளியாகியுள்ளது. வழக்கம்போல கெளதம் மேனன் படத்தில் ஹீரோக்கள் கதை சொல்லி ஆரம்பிப்பது போல தொடங்கும் ட்ரெய்லர், காதலில் தொடங்கி மோதலில் முடிகிறது. அத்துடன் படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.